இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா!
பிப்ரவரி 15,2010. தினமலர்
நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, “குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்’ என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். “யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது’ என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.
காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிபாதகத்தி… 498ஏ பத்தி உனக்கு தெரியாதா? சரியா விளிப்புணர்வு இல்ல போல… வரதட்சணை கேட்டு கொடுமைசயெதான் என் புருசன் னு ஒரு வெள்ளத்தால்ல கததை எழுதி கொடுத்தா அவன புடிச்சி உள்ள போட்டிருக்கலாம் அதவுட்டு கொழந்தைய கொண்ணுபுட்டியே
Interesting story .
http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1280
http://www.dinakaran.com/daily/crime/crime905.asp
நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றதாக கைதான மனைவி போலீசில் தெரிவித்துள்ளார். சேலம் கிச்சிபாளையம் நெல்லுகுத்தி பாறை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45). இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பழனிசாமி குடிபோதையில் சாந்தியிடம் நேற்று முன்தினம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தி, பழனிசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய நிலையில் பழனிச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.
போலீசாரிடம் சாந்தி அளித்த வாக்குமூலம்: பழனிச்சாமிக்கு நான் 3வது மனைவி. குடும்பத்தை காப்பற்ற கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். நான் வேலைக்கு செல்வதால் என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு பழனிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினமும் குடி போதையில் வந்த பழனிச்சாமி தகராறு செய்ததுடன் என்னை அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் பழனிசாமி தூங்கும் போது அவர் மீது நைலான் துணிகளை சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தேன் என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
For the same reason when Men kill his wife , why it is considered as DV ? [:(]