காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது
மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல்
புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி
புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது 20).
உறவினர் என்பதால் தனஞ்செயம், தவசெல்வி இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காதல் பறவைகள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்றனர். அங்கு தனஞ்செயம்-தவசெல்வி திருமணம் செய்து கொண்டனர்.
கோர்ட்டில் ஆஜர்
பின்னர் அவர்கள் கடலூர் வந்து பதிவு திருமணம் செய்தனர். இந்த நிலையில் மகளை காணவில்லை என்று சிவகாமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடியினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி கோர்ட்டுக்கு சென்றனர்.
2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அப்போது தாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனை கோர்ட்டில் சரி பார்த்தனர். அந்த வேளையில் தவசெல்வி தனது காதல் கணவர் தனஞ்செயத்துடன் கோர்ட்டு வராண்டாவில் நின்று கொண்டு இருந்தார்.
பரபரப்பு
இந்த நேரத்தில் தவசெல்வியின் சித்தப்பா கோவிந்தன் தலைமையிலான கும்பல் அங்கு வந்தது. அவர்கள் தவசெல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது. இதனை தடுக்க முயன்ற தனஞ்செயன் உறவினர்களை அந்த கும்பல் தாக்கியது. பின்னர் கோர்ட்டுக்கு வெளியே வந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தவசெல்வியை கடத்தி சென்றது.
இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
தனிப்படை
இந்த நிலையில் கடத்தல் கும்பல் திருசிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனே தனிப்படை போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து புதுப்பெண் தவசெல்வியை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு புதுப்பெண் தவசெல்வி மற்றும் கைதான 3 பேரும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
15 நாள் காவல்
தவசெல்வியிடம் விசாரணை நடத்திய போது, தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. தனது சித்தப்பா அழைத்ததால் சென்றதாக கூறினார். இதை தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
கைதான 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன் பேரில் அவர்கள் காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
புதுப்பெண் பல்டி
இதையடுத்து புதுப்பெண் தவசெல்வி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர், தனஞ்செயம் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டு இருந்தனர். பின்பு மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன், தவசெல்வியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. குடும்பத்தினரை பார்க்க சித்தப்பாவுடன் சென்றேன். தாயுடன் வாழ விரும்புகிறேன் என்று தவசெல்வி கூறினார்.
இதை கேட்ட தனஞ்செயம் (கணவன்) கதறி அழுதார். பின்பு சிறிது நேரம் கழித்து அவர் தனியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். (வேறென்ன வழி அவனுக்கு? இதையே அந்தக் கணவன் செய்திருந்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைத்திருப்பார்கள்!)
—–
வெட்கமில்லாமல் இந்த ஆண்கள் இன்னமும் காதல் கத்தரிக்காய் என்று அலைகிறார்களே, அவர்களுக்கு புத்தி வர இன்னும் பல நிகழ்வுகள் இதுபோல் தொடர்ந்து நடக்கவேண்டும்!
//இதை கேட்ட தனஞ்செயம் (கணவன்) கதறி அழுதார். பின்பு சிறிது நேரம் கழித்து அவர் தனியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். //
நமக்கு இதெ போலப்பா போச்சி ஒன்னு லவ்வு மன்னாங்கட்டின்னு ஒன்னா சேந்து சுத்திட்டு சுத்திவிட்டுட்டு ஒடுற பொம்பளை புள்ளங்களை போகும்போழுது ஒப்பாவி வைத்து அழுவது… இல்லாட்டி 498ஏ பொய்கேசுல எல்லாரும் புழல் சிறையில் உள்ள போகும்போழுது என்னமாதிரி அழுவுறது.
காதலிக்கும் ஆண்கள் எல்லோரும் முட்டாள்கள். செய்த தவறுக்கு தண்டனை காதல் தாண்,,,,,, வாழ்க காதல்,,,,,,,,