நம் நாட்டின் பெண்ணியவாதிகள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு பெண் போட்ட 498A கேசு தொடர்பாக ஆள் மாறாட்டத்தில் வெட்டித் தள்ளினார்கள். இப்போது ஒரு பெண்மணி குடிபோதையில் காரை ஓட்டி ஒரு போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேரை போட்டுத் தள்ளியிருக்கிறார்.
இதே போல் ஒரு ஆண் குடி போதையில் காரை ஓட்டி இடித்ததில் ஒரு பெண்ணின் சுண்டு விரலில் அடிபட்டிருந்தால் கூட குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து அந்த ஆணை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்!
இதுதான் உலகம்!
ஜனவரி 31,2010. செய்தி : தினமலர்
மும்பை: மது அருந்திய பெண், தான் ஓட்டி வந்த காரை, போலீஸ் ஜீப் மற்றும் பைக் ஒன்றின் மீது மோதிய விபத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை ஏ.சி.பி., அனில் தகால்கர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் மும்பையின் தென் பகுதியை சேர்ந்த அழகுக் கலை நிபுணரான நூரியா ஹவேலிவாலா (27), மது அருந்திய நிலையில் காரை ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், போலீஸ் ஜீப் மற்றும் பைக்கின் மீது மோதியது. இதில், போக்குவரத்து துறை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தீனாநாத் ஷிண்டே மற்றும் பைக்கில் வந்த அப்சல் கனோஜியா ஆகிய இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு காவலர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நூரியா ஹவேலிவாலாவை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சோதனையில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனில் தகால்கர் கூறினார்.
/போதையில் கார் ஓட்டி போலீஸ்காரரைக் கொன்றாள் பெண்/
போதையில் கார்ஓட்டிய ஒன்றும் அறியா(??) பேதை
ஒன்னுமில்ல இந்த குடிகாகர பா(பீ)ப்பா கவனமானத்தான் 150 கீ.மி வேகத்ததுல பாத்து நிதானமாத்தான் வண்டி ஒட்டுனிச்சி… ஆனா பாருங்க பயபுல்ல ஒரு போலிசும் இன்னோரு வீட்டுல சொல்லிட்டு வந்தகேசும் பலியாகிடிச்சி. இதுக்கேல்லாம் பாவம் அநத ஒன்னும் அறியா பேதை யை குற்றம்சொன்னா எப்படி??
அந்த ”பேதை” இன்னும் 498ஏ மூலுமா நாட்டுக்கு செய்யவேண்டிய கடமை எவ்வளவோ இருக்கு அவதவுட்டுட்டு சும்மா எதுக்கேடுத்தாலும் ஒன்னந்தேரியாத பாப்பாவ கொற சொல்லிகிட்டு…
டவுரி கேசுல இன்னைக்கு ஆஜார் ஆகனும். நான் கோர்ட்டுக்கு கிளம்புறேன், வர்ட்டா…/.
நல்லவேளை இந்தப் பெண் அப்பாவி கணவர் மீது பொய் கேசு ஏதும் போடவில்லை. அதுவரை சந்தோஷம்.
செத்தது போலிஸ் தானே போனால் போகட்டும் விடுங்கள். வேறு யார் தான் தண்டனை கொடுக்க முடியும்?