”குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் “சலிக்கும் வரை வாழ்வோம்; பிடிக்காவிட்டால் பிரிவோம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தை மக்கள் முன் வைக்கிறது. ஆனால் அதில் பேட்டி கொடுத்துள்ள ஒரு டாக்டர் என்னவோ “லிவ்-இன்” முறை தவறு, கெடுதலானது, தவிர்க்கப்பட வேண்டியது என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் நம் நாட்டில் இதுபோன்ற திருமணம் அல்லாத “லிவ்-இன்” உறவுகள் முழுமையான சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுவிட்டன என்பதை அவர் அறியவில்லை போலிருக்கிறது!
இனி அந்தக் கட்டுரையை வாசியுங்கள்:

பல பெண்ணியவாதிகள் தாங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவே பெரும் போராட்டம் நடத்திப் பெற்றிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்” எந்த வகையில் ஆண், பெண் சேர்ந்து திருமணம் தவிர்த்த இணைப்பு (Live-in Relationship) உறவுமுறையை சட்ட பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது என்பதை இங்கு காணுங்கள்:
Source: The Protection Of Women From Domestic Violence Act, 2005. (popularly known as “D.V Act”).
Section: 3
(f) “domestic relationship” means a relationship between two persons who live or have, at any point of time, lived together in a shared household, when they are related by consanguinity, marriage, or through a relationship in the nature of marriage, adoption or are family members living together as a joint family;
(a) “aggrieved person” means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;
(q) “respondent” means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;
இது தவிர இந்திய உச்சநீதி மன்றமும் இத்தகைய இணைந்து வாழும் முறைக்கு முழுமையான அங்கீகாரம் அளித்துள்ளது மட்டுமின்றி, அத்தகைய உறவுகளின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. (சுட்டி இங்கே)
இது போன்ற இன்னொரு நீதிமன்றத் தீர்ப்பு, இத்தகைய ஆண்-பெண் உறவு கொள்ளுதலைப் பற்றிய புதுப் பரிமாணத்தை எடுத்துக் காட்டி, ஒரு ஆண் ஒருசில மணித்துளிகள் மட்டுமே ஒரு பெண்ணுடன் அவளுடைய முழுச் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால்கூட அது இந்தச் சட்டத்தின் முன் “திருமணம் போன்ற உறவு முறை” என்று கொள்ளப்பட்டு, அந்த ஆண் அந்தப் பெண்ணுக்கு மெயிண்டெனென்ஸ் (ஜீவனாம்சம்) அளித்தே தீரவேண்டும் என்றும் வரையறுத்திருக்கிறது!
எந்த ஊரில்? நம் சென்னையில்தான்!
விவரம் அடுத்த பதிவில்!!


நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் பராயில்லை; நம்மை எதிர்த்து போராடாமல் இருந்தால் சரி என்றே அரசு இயந்திரங்கள் செயல்படுகின்றன.
சமூகத்தில் நடைபெறும் அனைத்து அவலங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் எதிராக மானமுள்ளவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம்…
இந்த சட்டம் திருமணம் என்கிற அமைப்பு தேவை தானா என்கிற நிலையை ஏற்படுத்தி உள்ளது .
திருமணம் செய்தால் 498a பாயும் அபாயம் உள்ளது. லிவிங் டுகெதர் முறையில் 498a போட முடியாது!
திருமணம் செய்தால் ஒரு மனைவிக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது . லிவிங் டுகெதர் எத்தனை பெண்களுடனுமும் உறவு வைத்துக் கொள்ளலாம்.!
எனவே ஆண்கள் திருமணத்தை தவிர்ப்பது நல்லது
மிகவும் சந்தோஷமான செய்தி தான் இது.
உலகளவில் இந்தியாவிற்கு பெருமையும், மரியாதையும் அதன் தனித்தன்மை வாய்ந்த காலாச்சாரத்திலிருந்து தான் கிடைக்கிறது. அது அழிந்துவிட்டால் இந்த அரசாங்கத்தின் ஆட்டமும் ஓய்ந்துவிடும். அப்போது தான் அவர்கள் செய்த தவறுகளை யோசிப்பார்கள். இனிவரும் அரசாங்கமும் சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுவார்கள். அதுவரை இந்த கலாச்சார சீரழிவை ஆதரிப்போம்.
பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ‘திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான’ சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் ‘long term relationship’ என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். ‘இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று ஆதி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும்.
எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை…
மும்பை
2002
இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா?
http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html
பிரபு ராஜதுரை அவர்களுக்கு நன்றி.
//எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை…//
நீங்கள் மேற்குறிய அன்பும் தன்மையும்தான் இப்போது மிஸ்ஸிங்!
அதனால்தான் திருமணங்கள் (நீங்கள் கூறியதுபோல்) வெறும் ரூபாய்க் கணக்கில் முடிகின்றன, அதுவும் ஒருதலைப்பட்சமாக! மூன்று முடிச்சு போட்ட பாவத்திற்காக கொட்டி அழுகிறான் கணவன்.
இந்தியாவில் சுமார் 40+ சட்டங்கள் மனைவியின் உரிமைகளையும் கணவனின் கடமைகளையும் வரையறுக்கின்றன. ஆனால் கணவனின் உரிமைகளையும் மனைவியின் கடமைகளையும் பற்றி ஒரு சிறு எழுத்துச் சில்லுகூட இல்லை!!
உங்களுக்குத் தெரிந்த எவருக்காவது திருமண வயதில் பையன் இருந்தால் அவர்களிடம் சற்று பேசிப்பாருங்கள் அவர்கள் எவ்வளவு விசனத்துடன் இருக்கிறர்கள் என்பதை வெளியுலகத்திற்கு தெரிவியுங்கள்.!
பார்வையாளர் கருத்து :
அன்புடையீர் ! வணக்கம் !!
இந்தியா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது, ஒரு சிலர் பழம்பெருமை பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர், ஆண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது, ஆண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது,ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கே அச்சப்படுகின்றனர்,
கட்டுப்பாடற்ற சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது, இனி வருங்காலங்களில் இதற்கு ஏற்ப சட்டங்கள் உருவாகும்,(தவறுகளை திருத்த முடியாவிட்டால் அதனை ஒழுங்குபடுத்துதல்) வலுவில்லாத அரசினால் பண்பாட்டுக்கு ஆதரவாக எதையும் உறுதியாக செய்ய முடியாது,
கதிர்நிலவன், தமிழ்நாடு. முன்னிரவு
11.28 25.05.2010
மிக்க நன்றி, கதிர்நிலவன் அவர்களே!
இன்றைய நிதர்சனத்தை தெளிவாகக் காட்டி விட்டீர்கள்.
திருமணம் ஒன்றுதான் வாழ்க்கை நடத்தும் வழி என்ற நிலைப்பாட்டிலிருந்து அனைத்து ஆண்களும் வெளிவந்து, மாற்று முறைகளை கைக்கொள்ளவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஆனாலும் விட்டில் பூச்சிகள் சில விழுந்து தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
“498a victims” என்று கூகிளில் தேடிப்பாருங்கள். பெரும் ஓலம் ஒலிக்கும்!!