6-12-2009 தேதியிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் கோவையில் அன்றாடம் நிகழும் கள்ளக்காதல் லீலைகளைப் பற்றி எழுதும்போது ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் கூறியதை எழுதியுள்ளார்கள். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:
“கோவையில் ஒரு பெரிய பணக்காரர் சார். அண்மையில் அவரது மனைவி அவரிடம் விவாகரத்து மற்றும் கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்.
அந்தப் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தவறான தொடர்பு இருந்தது. அது அந்தப் பணக்காரருக்கும் தெரியும். ஆனால் ஆதாரத்துடன் அதை நிரூபிக்க வழியில்லாததால் எங்களிடம் வந்தார்.
எண்ணி 48 மணி நேரத்தில் அந்தப் பெண்ணின் அந்தரங்க லீலைகளை வீடியோ ஆதாரத்துடன் படமெடுத்துக் கொடுத்தோம்.”
இப்படிப் போகிறது கதை. ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தை உண்மையில் தனக்குப் பிறந்ததுதானா என்ற கேள்வியிலேயே ராத்தூக்கம் பகல் தூக்கம்ல்லாமல் கழிக்க வேண்டிய நிலையை இந்த கள்ளக்க்காதல்களும், அதற்குத்துணை போகும் சட்டங்களும், பெண்ணியவாதிகளின் அட்டகாசங்களும், தீர்ர்ப்புகளும் அமைகின்றன.
இப்போது சில கள்ளக்காதல்களைப் பற்றியும், அவற்றினால் விளைந்த கொலைகளைப் பற்றியும் வாசியுங்கள்:
காவேரிப்பட்டணத்தில் பயங்கரம்
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி படுகொலை. கணவர் வெறிச்செயல்
காவேரிப்பட்டணம், டிச.4 – 2009. செய்தி – தினத்தந்தி
காவேரிப்பட்டணத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி அவரது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
குடும்ப தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போத்தாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன்(35). இவருக்கும் சூளகிரியை அடுத்த செட்டிப்பள்ளியை சேர்ந்த வள்ளியமம்மாள் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் சூளகிரி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வள்ளியம்மாளுக்கும், மற்றொரு வாலிபருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தாய் வீட்டிற்கு சென்ற வள்ளியம்மாளை குடும்பம் நடத்த வரும்படி சீனிவாசன் பலமுறை அழைத்தார். இருப்பினும் அவர் மீண்டும் கணவன் வீட்டிற்கு வரவில்லை.
படுகொலை
இந்நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் போத்தாபுரத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது சீனிவாசன் வீறீட்டில் இல்லை. அவரது தாய் உஷா, மைத்துனர் சண்முகம் ஆகிய இருவரும் வள்ளியம்மாளை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்தனர். அப்போது அங்கு வந்த சீனிவாசனுக்கும், வள்ளியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சீனிவாசன் அரிவாளுடன் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வள்ளியம்மாளின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
==========
கெலமங்கலம் அருகே அரிவாளால் வெட்டி பெண் படுகொலை
கள்ளக்காதலருக்கு வலைவீச்சு
ராயக்கோட்டை, டிச.4 – 2009. செய்தி – தினத்தந்தி
கெலமங்கலம் அருகே, அரிவாளால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள முகலூரை சேர்ந்தவர் நாகராஜ ரெட்டி. விவசாயி. இவரது மனைவி சுஜாதா (வயது 30). இவர்களுக்கு 10 வயதிலும், 8 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசப்பா என்பவரது மகன் கூலித் தொழிலாளி ரமேசுக்கும் (27), சுஜாதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் மாட்டு சாணத்தை ஊருக்கு கிழக்கே உள்ள ஒரு புளிய மரத்தடியில் கொட்டுவதற்காக எடுத்துச் சென்ற சுஜாதாவை, ரமேஷ் வழி மறித்து கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கேட்டை இன்ஸ்பெக்டர் வஜ்ஜிரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கெலமங்கலம் ரஜினி, உத்தனப்பள்ளி சம்பூரணம், ராயக்கோட்டை ஞானசேகரன் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று, சுஜாதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சுஜாதாவுக்கும், ரமேசுக்கும் ஏற்பட்ட தொடர்பு ஊராருக்கு தெரிய வரவே அவர்கள் பஞ்சாயத்து பேசி இருவரும் இனி ஒருவரையொருவர் சந்திக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த 6 மாதமாக சந்தித்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனியாக சென்ற சுஜாதாவை, ரமேஷ் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாபு உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான ரமேசை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஆண்களை பாதுகாக்க சட்டம் வந்தால் மட்டுமே பெண்களின் கொட்டம் அடங்கும். ஆனால் பெண்கள் சாது என்று வாங்கி வைத்திருக்கும் பெயருக்கு முன்னால் இதெல்லாம் சாத்தியமா.
தப்பு செய்யும் இருவரையும் தன்டிக்கனும் அப்போ தான் தவறு குறையும்
மலம் தின்னும் பன்றிகளை விட கேடு கெட்ட பெண்கள்