By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 101|
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.
அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, divorce, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 131|
கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர்
திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , “வம்சம்’ படம் பார்க்கச் சென்றார்.
காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, “எனது நெருங்கிய உறவினர்கள்’ என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, “நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்’ எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.
ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, “இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்’ எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.
சார்ந்த வகை கள்ள உறவு | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, child custody, divorce, dv act, husbands, law, lust, misuse, paramour, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-09-02 | பார்வை: 75|
ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்!
இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை!
இப்போது செய்தி (நன்றி; தினமலர்);
தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண், பின்னர் தானும் அதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதில், ஒருவயது குழந்தை இறந்தது.
கோவில்பட்டி, கயத்தாறு அடுத்த ஆத்திகுளம் விவசாயி காளிராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள்(28). இவர்களுக்கு எழிலரசி(8) உஷாராணி(1) ஆகிய இரு பெண்குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எழிலரசி, சமீபத்திய தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றார். அதற்காக காளிராஜ், அவரை கண்டித்தார். அப்போது காளிராஜிற்கும், அந்தோணியம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் உறவினர்கள் காளிராஜிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
அதனால், மனமுடைந்த அந்தோணியம்மாள், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள தோட்டத்திற்கு கூட்டிச்சென்று இரு குழந்தைகளுக்கும் பூச்சிமருந்து கொடுத்தார். உஷாராணி அதை முழுவதும் குடித்தார். எழிலரசி குடிக்கும்போது பாதியில் தட்டிவிட்டுவிட்டார். பின்னர், அந்த பூச்சிமருந்தை அந்தோணியம்மாளும் குடித்தார். அங்கு மயங்கிக்கிடந்த மூவரையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில், ஒருவயது குழந்தை உஷாராணி நேற்று இறந்தது. அந்தோணியம்மாள், எழிலரசி தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றுவருகின்றனர். கயத்தாறு போலீசார் விசாரித்தனர்.
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 95|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன்.
மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையை சேர்ந்த, மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்ஆண்டு படித்து வந்தார்.
மனோஜ் ஒருநாள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அனுபவித்துவிட்டு, நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாசப் படங்களை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தொடர்ந்து அந்த படங்களை காட்டி, மிரட்டி அனுபவித்தார் (அவர்தான் அனுபவித்தார், இவர் அனுபவிக்கவேயில்லை. பெண்களுக்குத்தன் செக்ஸ் ஆசையே கிடையாதே. சண்டாளப் பாவி ஆண்கள்தானே செக்ஸுக்கு அலைவது!).
இப்பிரச்னை பெரிதாகாமல் இருக்க, திருமணம் செய்துகொண்டு அவருடன், மதுரை டி.வி.எஸ்., நகரில் குடும்பம் நடத்தினோம். படித்து முடித்தவுடன், தஞ்சை பொன்னகர் ஒன்றாம் தெருவில் வசித்து வந்தோம். ஒருநாள், அவரது மொபைல்போன் மெமரி கார்டை பார்த்தேன். அதில், பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டராக அவர் இருந்தபோது, கருக்கலைப்புக்கு வந்த பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் கேட்டதற்கு, “இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்’ என, மிரட்டுகிறார். போலீசார் அவரிடம் உள்ள மொபைல்போன் மெமரி கார்டை பறிமுதல் செய்து, அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. (ஒண்ணுமே பிரியல்லயேப்பா!)
தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி மற்றும் படம்- தினமலர்
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-23 | பார்வை: 136|
செய்திகள் இரண்டு. இரண்டிலும் பாதிக்கப்பட்டது ஆண்களே!
செய்தி – 1:
”தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது.”
மொபைல் போனால் தாலி கட்டும் நேரத்தில் நின்றது திருமணம்
தினமலர் : ஆகஸ்ட் 23,2010. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68592)
திண்டுக்கல் : திண்டுக்கலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது. இருவரும் பிரிய மொபைல் போன் காரணமாக அமைந்தது.
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரியலூயிஸ் மகன் டோமினிக் லாரன்ஸ்(27). எலக்ட்ரீஷியன். இவருக்கும், பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த ஹென்றி மகள் சூரியாவிற்கும்(20) மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் நேற்று காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது பங்கு தந்தை மணமகன் விருப்பத்தை கேட்டார். அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றார். மணமகள் விருப்பத்தை கேட்ட போது, அவர் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றார். இதையடுத்து திருமணம் நின்றது. உறவினர்கள் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சம்மதிக்க வைத்தனர்.
ஆனால் மணமகனோ, “என்னை பிடிக்கவில்லை என்று கூறிய பெண்ணுடன் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும். பெண் பார்க்கும் போதே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்த போதும், திருமண உடைகளை அணியும் போது கூட கூறியிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி திருமணம் நடக்கும் நேரத்தில் என்னை வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டார்’ என்றார். திருமணம் நின்று போனதால் திருமணத்திற்கான செலவுத் தொகையை தருமாறு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் கேட்டனர். இரு வீட்டார் உறவினர்களும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படாததால், இருதரப்பினரும் திருமணம் முடிக்காமல் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து போலீசார் முன்னிலையில் பிரிந்து சென்றனர்.
மொபைல் போன் காரணம்: போலீசார் கூறியதாவது: தொடர்ச்சி » »
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் anti-male, biased laws, husbands, law, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 249|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை
”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.”
– இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘!
இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்!
2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு ரிலாக்ஸ் தேடவோ…. ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றோ… சுற்றுலாத் தலங்களாகப் பார்த்து மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். முதல் மாநாட்டை சிம்லாவிலும், இரண்டாம் மாநாட்டை கோவாவிலும் நடத்தி முடித்தவர்கள், இம்முறை அந்த மாநாடு ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில்!
மாநாட்டில் சோகமே உருவாக இருந்த கேரளாவின் கோகுலிடம் பேசினோம். ”எனக்கு சொந்த ஊர் திருச்சூர். வசதியான குடும்பத்தில் நான் ஒரே பையன். எனக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த கிருஷ்ணகலாவுக்கும் 2001-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு. நாங்க மும்பையில் குடும்பம் நடத்தினோம். கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்னைகள் முளைச்சது.
அடிக்கடி அவங்க வீட்டு பெருமையைப் பேசுற மாதிரி என்னைக் குத்திக்காட்டுவா. நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு சந்தேகம்தான். அடிக்கடி ஆபீஸுக்கே வந்து என்னைப்பத்தி விசாரிச்சு அசிங்கப்படுத்தினா. வீட்டுக்கு வந்த உடனே என் மொபைல் போனைப் பிடுங்கி சோதனை செய்றது வழக்கமாப்போச்சு.
ஒருநாள், ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’னு கேரளாவுக்குப் போயிட்டா. 10 நாளுக்கு மேலாகியும் வரலை. நான் போன் செய்து கூப்பிட்டா, ‘எங்க வீட்டுல உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல் றாங்க. இஷ்டம் இருந்தா வாங்க…’ன்னு சொல்லிட்டா. நான் வரலைன்னு சொன்னதும், எங்க குடும்பத்துல இருக்குற அத்தனை பேர் மேலயும் வரதட்சணை வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையவிட்டாள். சமீபத்தில்தான், இந்த அமைப்புபத்தி கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். இவங்க சட்டரீதியாக எனக்குத் துணையா இருக்காங்க…” என்றார்.
சுரேஷ் ராம் என்பவர், ”நான் சென்னையில் வியாபாரம் பண்றேன். என் மனைவியின் குடும்பத்தினர் பொய்யாக என் மேல் வரதட்சணை வழக்கு போட்டு அலையவெச்சாங்க. நானும் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இவங்கதான், ‘என் மேல் தவறு எதுவும் இல்லை. நான் வரதட்சணை கேட்கவும் இல்லை’ன்னு சட்டரீதியாக நிரூபிச்சாங்க. இந்த அமைப்பு மட்டும் இல்லைன்னா, நான் ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.” என்றவர் தொடர்ந்து,
தொடர்ச்சி » »
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 68|
டெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்:
அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.
இது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை கள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வாய்ப்பில்லை.
கூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.
சில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, harassment, husbands, law, maintenance, misuse, supreme court, victims, ஆண்பாவம், சட்டம், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 177|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):-
சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்
By: கீதா சாம்பசிவம்
சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.
வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.
இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?
தொடர்ச்சி » »
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-08-03 | பார்வை: 134|
கொடி தூக்கும் ஆண்கள் அமைப்பு.
(http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53457)
புதுடில்லி : “குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், “பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா’ இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, “அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த “தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்’ என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது:
பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே “கிரிமினல்’களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
தொடர்ச்சி » »
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, misuse, victims, ஆண்பாவம்
By: Tamil 498A on: 2010-07-01 | பார்வை: 720|
ஜூ.வியில் வெளியான கட்டுரை…
‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்பதற்கு, ‘கணவனைக் காப்பாற்ற, பதிவிரதையான மனைவி கொலையும் செய்வாள்’ என்று அர்த்தம் சொல்வார்கள். இப்போதெல்லாம் கள்ளக்காதலனுக்காக, கணவனைக் கொல்லும் மனைவிகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. கோவையிலும் அப்படி ஒரு சம்பவம்!
புதுச்சேரி மாநிலம் கள்ளியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், 28 வயது இளைஞர் பன்னீர்செல்வம். கோவையில் ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் திட்டப் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கவிதாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ஏற்கெனவே கவிதா, வேறு ஒரு கல்லூரி மாணவரைக் காதலித்த விஷயத்தை மறைத்து, அவசரமாகத் திருமணம் நடத்தப்பட்டது. பழைய காதலனை மறக்க முடியாத கவிதா, திட்டம் போட்டுத் தன் கணவனைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்து இருக்கிறாள்!
தொடர்ச்சி » »
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
சமீபத்திய மறுமொழிகள்